கல்லையும் உருக்கும், விக்ரமனையும் மிஞ்சும், ஒரு செண்டிமெண்ட் கடிதம் வரைந்துள்ளார் சாரு. அதைப்படித்த படிக்கும்போதே 'லா லா லா" என்ற விக்ரமன் பட BGM நம் மனதுள் ஓடுகிறது. கண்களின் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
இருந்தாலும். இதெல்லாம் உண்மையா நம் வாசகர்கள் நாம் நம்மைக் கேட்கும்பொழுது நாம் என்ன செய்வது. நாமே நம்மை அதே கேள்விகளைக் கேட்டுக் கொண்டோம்.
உண்மையில் சாரு எதிரிக்கு எதிரி நண்பன் என்றெல்லாம் நினைப்பவர் இல்லையா?
1. சாரு எதிரிக்கு எதிரி நண்பன் என்று நினைக்கமளிருந்தால் மாமல்லன், ஜெயமோஹனை விமர்சிக்கும் எல்லாம் எப்படி அவருக்குப் பிடிகிறது. மாமல்லனாவது ஜெயமோஹனை படிக்கிறார் அப்புறம் விமர்சிக்கிறார். இவர் தான் அவரைப் படிப்பதே இல்லையே, அப்படியெனறால் "படித்ததில் பிடித்தது" எல்லாம் போடுவது யார்??
2 . ஜெயமோகன் அவரது வாசகர் வட்டத்தில் எழுதிய கடிதங்கள் இருமுறை சாரு தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சாரு தான் ஜெயமோகன் எழுதுவதைப் படிப்பதே இல்லையே. அப்படியே படித்தாலும் தூங்கி விடுவாரே. அப்படியென்றால் இதையெல்லாம் சாரு தளத்தில் போட்டது யார். மிக மர்மமாக இருக்கிறதே..சாரு தூங்கும்போது யாரவது பதிவேற்றி விடுகிறார்களா என்ன?
சாருவின் கடிதம் உருக்கமான தொனியில் எழுதப்பட்டிருந்தாலும் யோசித்துப் பார்க்கையில் மிக திகிலூட்டுவதாக உள்ளது.
3 comments:
Good article.keep it up...
azifair-sirkali.blogspot.com
ஏதோ ஒரு ஒலகத்திலே இல்லாத புத்தகம் ஒன்ணு எழுதிற்றாராம். அதை நம்ம தலையில் கட்டி அடிக்க அவர் பண்ணும் தகிடுதத்தங்கள்,
அப்பப்பா! முதல் பிரதி ஐம்பதாயிரமாம், ஆருபெற்ற பிள்ளை தலையில விழப்போகுதோ?
அதுவரை இப்படியான லீலா வினோதங்கள் நடந்தே தீரும்.
இன்னும் நிறையக் காட்டுவார்! அவர் நித்தியானந்தா முன்னாள் சீடராச்சே!
காட்டிக்கிட்டே இருப்பார்.
சிம்பிள் ஆக , படிக்க இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறது. சாருவை வாருவதையே தொடர்ந்து எழுதாமல் வேறு பல விடயங்களையும் எழுதினால் இன்னும் சிறப்பு
Post a Comment