Monday, November 7, 2011

நூலக விவகாரம் - பச்சைத் தமிழனின் குரல்

வெளிநாடுபோக விசா வாங்கினாலும் அவ்வப்போது புதிப்பித்துக் கொள்ளவேண்டும் இல்லையென்றால் அது காலாவதியாகிவிடும்.
 
தமிழனாக இருப்பதும் அப்படிதான். அவ்வபோது உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் தமிழன் என்ற அடையாளம் நமக்குக் காணாமல் போய்விடும். இப்போது அப்படியொரு வாய்ப்பு. வாங்க உணர்சிவசப்படலாம்.
 
தமிழர் பண்பாட்டை வளர்த்தே தீருவது என்ற முடிவில் இருந்த சென்ற அரசு செய்த பல பண்பாட்டு முன்னேற்றங்களில் ஒன்று தான் இந்த நூலகம். இந்த பண்பாட்டு முயற்சிகள் எல்லோருக்கும் புரிவதில்லை.
 
சினிமாவுக்கு வரிவிலக்கு (வ குவாட்டர் கட்டிங் போன்ற பண்பாட்டுப் படங்கள்.),
 
கடைப் பெயர்களை எல்லாம் தமிழில் மாற்றியது. அதுவும் அவசர அவசரமாக ஒரு மாதம் மட்டும்.
 
பூங்காவுக்கு எல்லாம் செம்மொழி பூங்கா என பெயர்வைத்து. - பூங்காவுக்கு யாரவது சென்றிருந்தால் தெரியும். அங்கு நடக்கும் செயல்களுக்கு மொழியே தேவையில்லை என்று..
 
செம்மொழி மாநாடு (தமிழ் அறிஞர் திண்டுகல் லியோனி போன்றவர்களின் கருத்துக்களை நாம் கேட்பதற்கு).
 
அதாவது நம் மக்களுக்கு தமிழின் பெருமையைச் சொல்லி புரிய வைக்க முடிவதில்லை. அதனால் கட்டிடங்கள், சிலைகள் மற்றும் பூங்காக்கள் வழியே தமிழை வளர்க்க புதுவழி கண்டுபித்தது அந்த அரசு. அதற்கு நாமெல்லாம் பெருமைப் படவேண்டும்.
 
எனவே கொட்டுர்புரத்தில்  தமைமைச் செயலகம் கட்டிவிடக்கூடாது என்பதற்காகத் தான் அங்கே நூலகம் கட்டப் பட்டது என்றெல்லாம் சிலர் பேசுவது கேட்கத் தான் செய்கிறது. அதை நாம் கொண்டுகொள்ளத் தேவையில்லை.  எதற்காகக் கட்டப் பட்டது என்பது முக்கியம் இல்லை. என்ன கட்டப்பட்டது என்பது தான் முக்கியம் (இது பன்ச்)
 
கட்டிடங்களிலும் சிலைகளிலும் தான் தமிழ் பண்பாடு வளருகிறது. எனவே  கட்டிடங்களைக் காப்போம், கட்டிடங்கள் மூலம் தமிழைக் காப்போம் என சக பச்சைத் தமிழர்களை அழைக்கிறோம்.
 
இன்று நான் பச்சை சட்டை. ஆனால் வேறு கலர் சட்டை போட்ட தமிழர்களும் இந்தப் போராட்டத்தில் இணைவதில் தடையேதும் இல்லை.!!

No comments:

Post a Comment