Friday, November 25, 2011

வடிவேலு இலக்கியவாதியா? - சாரு லேட்டஸ்ட் இலக்கிய சர்ச்சை

வடிவேலு வசனங்கள் வெறும் காமெடி என்று தான் நினைத்து இருந்தோம். ஆனால் அவர் பேசுவதும் இலக்கியம் தான் என ஒரு முக்கிய இலக்கிவதியால் இப்போது தெரியவந்துள்ளது.

குழப்பமாக இருக்கிறதா. இதோ உங்கள் பார்வைக்கு..



















வடிவேலு டயலாக்:


"மாமூல் வாங்கி பிரியாணி சாப்பிடறப்போ லெக் பீஸ் எல்லாம் நீ சாப்பிட்டிட்டு வெறும் குஸ்கா மட்டும் எனக்கு கொடுத்த. சரி வளர்ற பிள்ளையாச்சே சாப்பிட்டு போகட்டும்னு விட்டேன். அதுக்கு நீ காட்டுற நன்றி இது தானப்பா?"


இலக்கியவாதி டயலாக்:

உங்கள் சிறுகதைகளை உலகத் தரமானது என போற்றிக் கொண்டாடி இருக்கிறேன்....... உங்களை என் அளவுக்குப் பாராட்டியவர்கள் தமிழில் குறைவு என்றே நினைக்கிறேன். ...

அந்த நாவல் எப்படிப்பட்டதாகவும் இருக்கட்டும்; அதை நீங்கள் படிக்க நேரம் இல்லாமல் போகட்டும். உங்களுக்கு அது வந்து சேர்ந்ததா என்று 20 நாட்களுக்கு முன்பு கேட்டதற்கு இன்று வரை பதில் சொல்லாததை எப்படி நான் புரிந்து கொள்வது? ....


2010க்கான பாரதீய ஞான பீடப் பரிசுக்காக ஒரு பெயரைப் பரிந்துரைக்கச் சொன்னார்கள். பாரதீய ஞான பீடத்திற்கு நான் உங்கள் பெயரைத்தான் பரிந்துரை செய்தேன். அதையும் உங்களுக்கு போன் செய்து சொன்னேன். இந்த ஆண்டும் பரிந்துரைக் கடிதம் வரும். இந்த ஆண்டும் உங்கள் பெயரையே பரிந்துரை செய்வேன்.

.....................



ஒருவரின் படைப்பை உலகத் தரமானது என பாராட்டினால் அவரும் பதிலுக்கு பாராட்டியவரின் படைப்பைப் பற்றி பேச வேண்டுமா? இதற்குத் தான் அதுவா? ஒகே ஒகே

இப்படித் தான் இலக்கிய உலக விருதுகள் நடக்கிறதா? ஒகே ஒகே

இதை எப்படி புரிந்துகொள்வது என நமக்குத் தெரியவில்லை. பாராட்டு என்பது தான் இலக்கிய உலக பிரியாணியா என்ன?

5 comments:

Anonymous said...

யாரு அந்த முக்கிய இலக்கிவதி??

Anonymous said...

ஒ௫ இழவும் புரியல ??

shrek said...

ha ha ha .... semma comparison.

BTW i'm not sure if vadivelu's dialogues have "ilakkiya" value or not, but since we all use it extensively some of his phrases will stand test of time for sure.

if we properly record the evolution of tamil language, then to explain the genesis of certain phrases we will have to cite vadivelu's work.

ஸ்ரீ சரவணகுமார் said...

நான் நேற்று சாருவுடைய பதிவைப்படித்தவுடன் இந்த வடிவேலு டயலாக் தான் எனக்கு ஞாபகம் வந்தது. பதிவிடலாம் என்று நினைத்திருந்தேன். உங்கள் பதிவைப் பார்த்தவுடன் ஆச்சரியமடைந்தேன்.

Anonymous said...

வடிவேலு சாரு இருவருமே மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர்கள்ன்னு தெரியும். இதில் அவர்களுக்குள் கடும் போட்டியும் உண்டு என்பது எல்லாருக்கும் தெரியும். நீங்க என்ன புதுசா இலக்கியம் அது இதுன்னு சொல்றீங்க

Post a Comment