Thursday, December 1, 2011

கொலைவெறி டி - தமிழன் இளிச்சவாயனா

தனது அறிவுலக சொத்துகளை பிறருக்குக் கொடுத்துவிட்டு அவர்களையே வாய்பிளந்து பாத்துப் புகழ்வதுதான் தமிழனின் தலைவிதி. தமிழனுக்கு இது பழகியது தான். இதை ஒரு வழக்கமாகவே பழகிக்கொண்ட தமிழனுக்கு இது ஒரு பெரிய விசயம் இல்லை தான்.

ஆதிக்க சக்திகளின் சதியையும், அவர்களின் கைக்கூலிகளின் கூப்பாடுகளையும் தமிழனின் தலை விதியையும் நினைக்கும் எவருக்கும் ரத்தம் கொதிப்பதை மறுக்க முடியாது. ஆனால் இன்றைய சூழலில் தமிழர்கள் ரத்தம் கொதிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத கையாலாகாத நிலைமையில் இருப்பதுயும் மறக்கக் கூடாது. (மறுக்க.. மறைக்க)

"கொலைவெறி டி" என்ற பாடலை தனது வீடுகளிலேயே கேட்டுக் கொண்டு புல்லரிக்கும் தமிழர்களைப் பார்த்தால் நமக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை. இந்தப் பாடல் எங்கும் பரவும்போது மகிழ்ச்சியடையும் தமிழன், தான் இன்னும் இளிச்சவாயன் தான் என ஒப்புக் கொள்கிறான்.

முறத்தால் புலியை விரட்டிய பெண்களைப் பற்றிப் பாடிய வரலாறு கொண்ட தமிழினத்தின் தன்மானத்தை தரம் தாழ்த்த, குலம் கெடுக்கும் கோடாரிக்காம்பு போல, தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலாரார் வெளியிடப் பட்டுள்ளது இந்தப் பாடல்.

"ஏன் இந்த கொலைவெறி" என்று உண்மையில் சொன்ன வடிவேலுவின் பெயரும் திட்டமிட்டு மறைக்கப் படுவது எந்தவிதமான நுண்ணரசியல் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தமிழனையும், தமிழ் பண்பாட்டையும், குறிப்பாக தமிழ் பெண்களையும் அந்நிய மொழிகொண்டு வசைபாடும் இதுபோன்ற பண்பாட்டு அவலங்களை இன்னும் அனுமதித்தால், தமிழன் என்ற ஒரு இனம் இருந்ததை வரலாற்றில் கூட தேட முடியாதோ என்ற துக்கம் தம்மை தாக்குவதால் இதோடு முடித்துக் கொள்கிறோம்.

கண்ணிருப்போர் பார்க்கட்டும், காத்திருப்போர் கேட்கட்டும், கொஞ்சமாவது தன்மானமுயோர் கொஞ்சம் யோசிக்கட்டும்!!

6 comments:

ஓசூர் ராஜன் said...

nallathane yeluthureenga? appuram parkkallam

ஓசூர் ராஜன் said...

nalla pathivu, athaiye english moliyil sonnaa... goodu

க‌.அசோக்குமார் said...

தாங்கள் கூறியது உண்மை. மிகவும் அவசியமான பதிவு.

ஷைலஜா said...

என்ன செய்வது பட்டுக்கோட்டையாரும் நாமக்கல்கவிஞரும் பாரதியும் பாரதிதாசனும் கணணதாசனும் எழுதிய காலத்தால் அழிக்கமுடியாதபாடல்களை காணாமல் போகச்செய்ய இது ஒரு முயற்சி.ஆனா இதெல்லாம் கடந்துபோகும் மேகங்கள் .. அவைகள் சூரிய சந்திரர்கள் நிலைத்து நிற்கும் என்றும் உங்க இடுகை அருமை.

Anonymous said...

indha kolaveri paadal manangetta vetkkamilladha somberi thamizhargalukkanadhu

kolaveri kolaveri di said...

என்னத்த சொல்றது போங்க...

Post a Comment