Thursday, March 1, 2012

சாரு, எம்.டி.எம்- க்கு கவுண்டமணி அட்வைஸ்

யாருப்பா இந்த எம்.டி.எம் என்று பரபரப்பாக இருந்தது ஒரு காலத்தில். நம்மைபோன்ற புது வாசகர்ளெல்லாம், சிங்கம் களமிறங்கிடுச்சு என பார்த்துக் கொண்டிருந்தோம். அவரெல்லாம் அந்தக் காலத்திலேயே அப்படி என்றார்கள் சிலர்.
தமிழுக்கு பல கலைச் சொற்களைத் தந்தவர் என்பது அவரது பெருமையாகச் சொல்லப்பட்டது. அந்த விவாதம் சட்டென முடிந்தாலும் இதுபோன்ற ஒரு விவாதம் மூலம் கவனத்துக்கு வந்தது இலக்கிய வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பாகவே இருக்கும் என நினைத்தோம்.
 
ஆனால் அது சிறிது காலம் தான். அவரது இன்னொரு விவாதத்தில் அவரது இன்னொரு முகம் வெளிவந்தது.  அவர் தற்போது வெற்றிகரமாக அறிமுகப்படுத்திய கலைச்சொல் "பொறுக்கி மொழி' என்பது தான்.  இப்போது இவர் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கண்டு இலக்கிய உலகம் கலங்கிப் போய்தான் உள்ளது.. மயிராண்டி.. சவத்து மூதி..இதெல்லாம் தான் இவர் பயன்படுத்தும் கலைச் சொற்கள் இப்பொழுது.
 
இன்னொரு எழுத்தாளர் சாரு. இவர் வெறிநாய், சொறிநாய் என்று இன்னொரு பதிவு எழுதியுள்ளார்.
 
என்ன பிரச்சனை இவர்களுக்கெல்லாம்? மாமல்லன்!.
 
மச்சி சார் என அழைக்கப்படும் மாமல்லனின் அதிரடி முறைகளோடு நமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், இவரின் பங்கு மறுக்கமுடியாதது. ஜெயமோகன், எஸ்ரா, சாரு மற்றும் எம்.டி.எம் என்று பாரபட்சமில்லாமல் அடித்து நொறுக்குவது இவரது பணி. இதில் சில நமக்கு அபத்தமாகத் தோன்றினாலும் பல முக்கிய பதிவுகள் இவருடையது.
 
ஆனால் இவரை எதிர்கொள்ள முடியாமல், கீழ்த்தரமான முறையில் இவரை வசைபாடுவது ஏற்கமுடியாத ஒன்று.  படைப்பாளி விமர்சனத்தைப் பொருட்படுத்தினால் பதில் சொல்லவேண்டும், அல்லது கடந்துபோவதே சரி. கீழ்த்தரமான வசையில் இறங்குவது படைப்பாளிகள் என்று சொல்லிக்கொள்பவர்களின் இயலாமையைத் தான் காட்டுகிறது.
 
சரி மாமல்லனின் வார்த்தைப் பிரயோகங்கள் சரியாய் எனக் கேள்விவரலாம். எப்போதுமே விமர்சகனுக்குக் கொஞ்சம் சுதந்திரம் அதிகம்.
 
"ரௌடித்தனம் செய்யனும்னு ஆசைப்படுறவன் சொந்தவீடு வச்சிருக்கக் கூடாது.." என்பார் கவுண்டமணி ஒரு படத்தில். இதை சாருவுக்கும், எம்.டி.எம் கும் நாம் டெடிகேட் செய்கிறோம்...

Tuesday, February 7, 2012

மானமா? சாருவுக்கா?

மனிதர்களுக்கு பொறாமை வருவது இயல்பு. ஆனால் பொறாமையே மனிதராக வாழ்வது என்பது ஒரு அதிசயம் தான். சாரு என்ற எழுத்தாளர்(??) அப்படியொரு அதிசயம்.
 
அப்படி இவர் என்னதான் எழுதினார் என்று தெரியவில்லை. எப்போதும் புலம்பல்களும் வசைகளுமாக வாழும் இவர், அந்த வசைகளைத் தொகுத்து வெளியிட்ட லேட்டஸ்ட் நாவல் பற்றிய கூட்டம் ஒன்று நடந்தது.
 
சரி அதில் என்னதான் அப்படி பேசினார்கள் என்றால், அவர் பேசியது எல்லாமே எஸ்ராவுக்கு நடந்த விழா பற்றி. இப்படியோரு மானம் கெட்ட செயல் ஏதாவது உண்டா எனத் தெரியவில்லை. நாவலைப் பற்றி கூட்டம் நடத்தினால் அதைப் பற்றி பேசவேண்டியது தானே? 
 
இதை ஒரு தொடராகவே அவரது தளத்தில் எழுதத் தொடங்கிவிட்டார். உண்மையில் அவர் மீது நம்பிக்கை இருந்தால் அவர் நாவல் தொடர்பான விவாதங்களை செய்ய வேண்டும். ஆனால் பாவம் அவ்வளவு மானம் இருந்தால் அவர் ஏன் இப்படி இருக்கிறார்.
 
அப்படியென்றால் அவர் நாவலைப் பற்றி சொல்ல அவருக்கு எதுவும் இல்லையா? அவர் நடத்திய கூட்டத்தின் தலைப்பு என்ன? நாவல் மீதான விவாதம் என்று கூறி, சம்பந்தமிலாமல் புலம்புவது வந்தவர்களை செருப்பால் அடித்தது போலாகாதா?
 
ரஜினி பேசியது இலக்கியம் பற்றி வாசிப்பு பற்றி. ஆனால் அவரை நடிகர் என்கிறோம்.
 
சாரு பேசுவது பொறாமை மற்றும் வசைகள். ஆனால் அவரை எழுத்தாளர் என்கிறோம்.
 
என்ன மாதிரியான சூழலில் தமிழ் இலக்கிய உலகம் இருக்கிறது.