Wednesday, September 23, 2015

மதுரை தாக்குதலுக்குப்பின் கமல் கருத்து - மக்கள் அதிர்ச்சி

வளர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன், மதுரையில் சில ரவுடிகளால் தாக்கப்பட்டது தெரியவந்ததும் அனைவரும் அதிர்ந்தனர். சினிமா ஆர்வமிலாத நடுநிலையார்களும்கூட இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்த தாக்குதலை நடத்தியது அவரின் தொடர் வெற்றிகள் மீது பொறாமை கொண்ட கமல் ரசிகர்கள் தான் என்று ஆரம்பத்தில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன, சிவகார்த்திகேயன் வருவதற்கு சிறிது நேரம் முன்புதான் கமல் அங்கு வந்திறங்கிறார் என்பதும் குறிப்பிடப்பட்டது. ஆனால் இதில் கமலுக்கு ஒப்புதல் இருக்காது என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது.

ஆனால் புதிய தலைமுறை வெளியிட்டுள்ள இந்த வீடியோ நடுநிலையார்களை அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது. தாக்கப்பட்ட பின்னரும் யாரையும் குறைக்கூறாமல், அது ஒரு சிறிய சம்பவம் எனச் சொல்லி தனது பெருந்தன்மையை சிவகார்தியேயன் காட்டினார்.

ஆனால் அதற்கு மாறாக, உலகமே வீடியொவில் பார்த்த அந்த சம்பவம்(தாக்குதல்) நடக்கவே இல்லை என்பதுபோல “அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று கமல் வெகு கூலாக சிரித்துக்கொண்டே சொல்லும் காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.  இது சில சந்தேகங்களையும் எழுப்புவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.இதில் சம்பத்தப்பட்டவர்களை காப்பாற்ற முயல்கிறாரா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

வீடியோ லின்க்
https://www.youtube.com/watch?v=mrE0LyHmBr8



சிவகார்த்திகேயன், தன்மீது தாக்குதல் நடந்த பின்னரும் ஒரே மேடையில் கமலுடனே சிரித்தவண்ணம் கலந்துகொண்டதும் மக்களால் பாராட்டப்படுகிறது.



கமல் ஒரு மகத்தான கலைஞர் என்பதில் நமக்கு மாற்று கருத்தில்லை. இருந்தாலும் இந்த சம்பவம் மக்கள் மனதில் கவலையை உருவாக்கியுள்ளது.

No comments:

Post a Comment