Wednesday, November 23, 2011

ரஜினி - அரசியலுக்கு கனிகிறதா காலம்

அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்கள் ஒரு போக்கை அவதானிக்கலாம். அரசியலின் மிகப்பெரிய வெற்றிகளெல்லாம் முயற்சியால் கிடைத்தவை அல்ல. காலம் கனியும் வரை காத்திருந்து அதை பயன்படுத்திக் கொண்டவர்களுக்கே மிகப்பெரும் வெற்றிகள் சொந்தமாகியுள்ளன.

இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும். சமீபத்தைய உதாரணம் .தி.மு. வின் வெற்றி. அந்தக் கட்சியே காணாமல் போய்விடும் என்று கூட ஒரு வருடத்துக்குமுன் சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிர்க் கட்சியாக இருந்தபோது அந்தக் கட்சி எதுவும் பெரிதாகச் செய்துவிட வில்லை. இருந்தாலும் தி.மு. மீதிருந்த அதிருப்தியும், ஸ்பெக்ட்ரம் கவாநித்தால் தந்த அதிர்ச்சியும் .தி.மு. வை ஆட்சியில் அமர்த்தியது. எந்தொரு பெரிய முயற்சியும் இல்லாமல் !!



இதற்கு இன்னொரு காரணம் தமிழகத்தில் இரு கட்சிகளுக்கு மாற்றாக எந்தவொரு மாற்று சக்தியும் இல்லையென்ற நிலையும் தான். ஏன் தமிழகத்தில் அப்படியொரு மாற்று சக்தி உருவாகவே இல்லை?

ஒரு புதிய சக்தி தோன்றவும் ஒரு காரணம் அல்லது தேவை கண்டிப்பாக இருக்கவேண்டும். தேவை இருக்கும்போது அப்படியோரு சக்தி தானே உருவாகிவிடும் வெற்றிடம் இருந்தால் அதை நிரப்ப காற்று வருவதுபோல.

அப்படியொரு தேவை ஒரு காலத்தில் இருந்தபோது, அந்த அரசியல் வெற்றிடம் ரஜினியை உள்ளிளுத்தது. ஆனால் பல காரணிகளால் அவர் அப்போது அதை எடுத்துக்கொள்ளவில்லை. அந்த வாய்ப்பை தானே முன்வந்து தி.மு.-வுக்கு அளித்தார். தி,மு. வும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அத்தோடு அந்த வெற்றிடமும் அப்போதைக்கு இல்லாமலானது.


-----


ஆனால் இப்போதைய தமிழக அரசியல் ஒரு வினோதமான சமன்பாட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. எதிக் கட்சியான தி.மு.. மிகப்பெரிய தோல்விகளையும், வழக்குகளையும் சந்தித்து வருகிறது. தான் பங்குபெறும் மத்திய அரசில் இருந்துகொண்டே சி.பி. வழக்குகளை சந்திப்பது அதை மிகப்பெரிய தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைமைப் போட்டிகளும் அந்தக் கட்சியின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ளன. ஏதாவது ஒரு அதிசயம் நடந்தால் தான் உண்டு.

மாற்றுக் கட்சியென சிறு நம்பிக்கை கொடுத்த விஜயகாந்த், கூட்டணிக்குப் பிறகு எம்.எல். -க்களை பெற்றாலும், தனது தனித் தன்மையை இழந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதன் பலன் தெரிந்தது. மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது அவரது கட்சி.

பா. . , .தி.மு.. போன்ற கட்சிகள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை.


----------------------------------




இது இப்போதைய சூழ்நிலை. மிகப் பெரிய வெற்றியில் இருக்கும் .தி.மு. அரசை தட்டிக் கேட்க இப்போது யாருமே இல்லை என்ற நிலை தான் உள்ளது.

ஒரு மிகப் பெரிய விலையேற்றத்தைக் கூட மிகச் சாதாரணமாக இந்த அரசால் கொண்டுவர முடிகிறது. இதனால் மக்கள் கொதிப்படைந்தாலும் இந்த கோபம் வேறு எந்தக் கட்சிகளுக்கும் சாதகமாக மாறவில்லை.

தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய வெற்றிடம் மறுபடி உருவாகிவருகிறது.


---------------------
கடந்த பத்து வருடங்களில் ரஜினி அரசியலை இன்னும் கவனமாக கவனித்து வருகிறார்.

அவர்
எப்போதும் அதிலிருந்து விலகியதாகத் தெரியவில்லை. கடைசியாக ராகவேந்திர மண்டபத்தில் நடந்த கூட்டம் கூட பூடகமாகத் தான் இருந்தது. அத்வானி போன்ற தேசியத் தலைவர்களிடமும், மற்றும் பல மாநில அரசியல் தலைவர்களுடனும் ரஜினி கொண்டுள்ள நெருக்கம் குறிப்பிடத் தக்கது.



இப்போது ரஜினிக்கு அரசியலில் செல்வாக்கு இல்லை என நம்பும் சிலர்கூட தேர்தலில் நாளில் ரஜினி வாக்களித்தது ஒரு மிகப் பெரிய செய்தியானதை மறந்திருக்க மாட்டார்கள். அவர் . தி.மு. -வுக்கு வாக்களித்தார் என்ற செய்தியும், ஊழலுக்கு எதிராக அவர் அளித்த ஒரு பேட்டியும் தமிழக தேர்தல் முடிவில் ஏற்படுத்திய ஒரு குறிப்பிடத் தக்க தாக்கத்தை மறுக்க முடியாது.

எனவே தமிழக அரசுக்கு மீது மக்கள் அதிருப்தியடைந்தால் அது இப்போதிருக்கும் எந்தொரு கட்சிக்கும் ஆதரவாக மாற்றிவிடாது. அது ஒரு வெற்றிடத்தை நோக்கியே செல்லும், அதுவே மறுபடி ரஜினியை உள்ளிழுக்கும் சக்தியாக இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

ஒருமுறை அரசியலின் அழைப்பை தவிர்த்த ரஜினி, இம்முறை என்ன செய்யப் போகிறார் என்பது காலத்தின் கேள்வி