Friday, December 16, 2011

சாருவுக்கே அவதூறா? அடிப்பொடிகளின் அட்டாக்

சாருவின் நிகழ்சிகள் என்றால் பரபரப்பு மற்றும் அக்கப்போர் பிரியர்களுக்கு எப்போதுமே தீனிக்குப் பஞ்சமில்லை. அவரது லேட்டஸ்ட் புத்தக வெளியீடும் அதைச் சுற்றி நடக்கும் அக்கப்போர்களும் நம்மைப்போன்ற இலக்கிய வாசகர்களின் இலக்கிய தாகத்தை தணித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தப் புத்தகத்தை முழுவதும் வாசித்து ஒருவர் எழுதிய விமர்சனம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்த விமர்சனத்துக்கு பல விமர்சனங்கள் வந்து விட்டன.

http://www.tamilpaper.net/?p=5024

புத்தகத்தை விமர்சித்த அவரை சாருவின் ரசிகர்கள் பலவிதமாக விமர்சித்தனர். அதன் உச்சகட்டமாக சாருவின் தளத்தில் வந்துள்ள இந்த விமர்சனம்.

இதைப் படித்தபின் விமர்சித்த அவர் எழுதுவதையே விட்டுவிடுவார் எனத் தோன்றுகிறது. அப்படி ஒரு காட்டமான வசை இது. சாருவோடு மோதுபவர்களுக்கு இது நல்ல பாடம். நல்ல வேணும்,,, யாரு கிட்ட...

முதலில் உள்நோக்கம் என்றார்கள், அடுத்தது அரவது கவிதைகளைப் பற்றி திட்டினார்கள். அப்போதும் அவர் அசரவில்லை.

கடைசியாக அவரும் சாரு மாதிரி தான் எழுதுகிறார் என்று ஒரு கடுமையான வசை. ஆனால் நமக்கு என்ன சந்தேகம் என்றால் இதில் யாரை திட்டுகிறார்கள் என்றே புரியவில்லை.

சாரு போல எழுதுவது அவ்வளவு அசிங்கமா? :)----------------------------------------
charuonline.com/blog/?p=2722

"இப்போது, இந்த சி. சரவணகார்த்திகேயனுக்கு ஒரு வார்த்தை. உங்களைப்பார்த்தால் உண்மையில் பரிதாபமாகவே இருக்கிறது. ஏனெனில், சாருவைப் பற்றி எதையாவது தவறாக எழுதவேண்டும் என்ற நோக்கில், மூளை, நாடி, நரம்பெங்கும் சாரு வெறி பரவியதில், சாருவாகவே நீங்கள் மாறிவிட்டீர்கள் என்று தெரிகிறது. அதனால்தான் சாரு எழுதியதைப்போலவே உங்கள் விமர்சனம் என்ற துவேஷ வாந்தியும் இருக்கிறது."

-------------------------


இதுக்கு என்ன சார் அர்த்தம்? சாரு மாதிரி எழுதுவது தான் ரெம்பக் அசிங்கமான விஷயாமா? இதை சாரு தளத்திலேயே சொல்வதற்கு சாருவுக்கு எவ்வளவு நேர்மை இருக்கிறது...
ஆனால் சாருவின் ரசிகர்களுக்கு நமது வேண்டுகோள் ஒன்று. விமர்சிப்பவர்களை எப்படி வேண்டுமானாலும் நீங்களும் விமர்சியுங்கள். ஆனால் சாருவோடு ஒப்பிட்டு திட்டாதீர்கள். பாவம் அவர்கள். :)

Thursday, December 1, 2011

கொலைவெறி டி - தமிழன் இளிச்சவாயனா

தனது அறிவுலக சொத்துகளை பிறருக்குக் கொடுத்துவிட்டு அவர்களையே வாய்பிளந்து பாத்துப் புகழ்வதுதான் தமிழனின் தலைவிதி. தமிழனுக்கு இது பழகியது தான். இதை ஒரு வழக்கமாகவே பழகிக்கொண்ட தமிழனுக்கு இது ஒரு பெரிய விசயம் இல்லை தான்.

ஆதிக்க சக்திகளின் சதியையும், அவர்களின் கைக்கூலிகளின் கூப்பாடுகளையும் தமிழனின் தலை விதியையும் நினைக்கும் எவருக்கும் ரத்தம் கொதிப்பதை மறுக்க முடியாது. ஆனால் இன்றைய சூழலில் தமிழர்கள் ரத்தம் கொதிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத கையாலாகாத நிலைமையில் இருப்பதுயும் மறக்கக் கூடாது. (மறுக்க.. மறைக்க)

"கொலைவெறி டி" என்ற பாடலை தனது வீடுகளிலேயே கேட்டுக் கொண்டு புல்லரிக்கும் தமிழர்களைப் பார்த்தால் நமக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை. இந்தப் பாடல் எங்கும் பரவும்போது மகிழ்ச்சியடையும் தமிழன், தான் இன்னும் இளிச்சவாயன் தான் என ஒப்புக் கொள்கிறான்.

முறத்தால் புலியை விரட்டிய பெண்களைப் பற்றிப் பாடிய வரலாறு கொண்ட தமிழினத்தின் தன்மானத்தை தரம் தாழ்த்த, குலம் கெடுக்கும் கோடாரிக்காம்பு போல, தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலாரார் வெளியிடப் பட்டுள்ளது இந்தப் பாடல்.

"ஏன் இந்த கொலைவெறி" என்று உண்மையில் சொன்ன வடிவேலுவின் பெயரும் திட்டமிட்டு மறைக்கப் படுவது எந்தவிதமான நுண்ணரசியல் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தமிழனையும், தமிழ் பண்பாட்டையும், குறிப்பாக தமிழ் பெண்களையும் அந்நிய மொழிகொண்டு வசைபாடும் இதுபோன்ற பண்பாட்டு அவலங்களை இன்னும் அனுமதித்தால், தமிழன் என்ற ஒரு இனம் இருந்ததை வரலாற்றில் கூட தேட முடியாதோ என்ற துக்கம் தம்மை தாக்குவதால் இதோடு முடித்துக் கொள்கிறோம்.

கண்ணிருப்போர் பார்க்கட்டும், காத்திருப்போர் கேட்கட்டும், கொஞ்சமாவது தன்மானமுயோர் கொஞ்சம் யோசிக்கட்டும்!!

Friday, November 25, 2011

வடிவேலு இலக்கியவாதியா? - சாரு லேட்டஸ்ட் இலக்கிய சர்ச்சை

வடிவேலு வசனங்கள் வெறும் காமெடி என்று தான் நினைத்து இருந்தோம். ஆனால் அவர் பேசுவதும் இலக்கியம் தான் என ஒரு முக்கிய இலக்கிவதியால் இப்போது தெரியவந்துள்ளது.

குழப்பமாக இருக்கிறதா. இதோ உங்கள் பார்வைக்கு..வடிவேலு டயலாக்:


"மாமூல் வாங்கி பிரியாணி சாப்பிடறப்போ லெக் பீஸ் எல்லாம் நீ சாப்பிட்டிட்டு வெறும் குஸ்கா மட்டும் எனக்கு கொடுத்த. சரி வளர்ற பிள்ளையாச்சே சாப்பிட்டு போகட்டும்னு விட்டேன். அதுக்கு நீ காட்டுற நன்றி இது தானப்பா?"


இலக்கியவாதி டயலாக்:

உங்கள் சிறுகதைகளை உலகத் தரமானது என போற்றிக் கொண்டாடி இருக்கிறேன்....... உங்களை என் அளவுக்குப் பாராட்டியவர்கள் தமிழில் குறைவு என்றே நினைக்கிறேன். ...

அந்த நாவல் எப்படிப்பட்டதாகவும் இருக்கட்டும்; அதை நீங்கள் படிக்க நேரம் இல்லாமல் போகட்டும். உங்களுக்கு அது வந்து சேர்ந்ததா என்று 20 நாட்களுக்கு முன்பு கேட்டதற்கு இன்று வரை பதில் சொல்லாததை எப்படி நான் புரிந்து கொள்வது? ....


2010க்கான பாரதீய ஞான பீடப் பரிசுக்காக ஒரு பெயரைப் பரிந்துரைக்கச் சொன்னார்கள். பாரதீய ஞான பீடத்திற்கு நான் உங்கள் பெயரைத்தான் பரிந்துரை செய்தேன். அதையும் உங்களுக்கு போன் செய்து சொன்னேன். இந்த ஆண்டும் பரிந்துரைக் கடிதம் வரும். இந்த ஆண்டும் உங்கள் பெயரையே பரிந்துரை செய்வேன்.

.....................ஒருவரின் படைப்பை உலகத் தரமானது என பாராட்டினால் அவரும் பதிலுக்கு பாராட்டியவரின் படைப்பைப் பற்றி பேச வேண்டுமா? இதற்குத் தான் அதுவா? ஒகே ஒகே

இப்படித் தான் இலக்கிய உலக விருதுகள் நடக்கிறதா? ஒகே ஒகே

இதை எப்படி புரிந்துகொள்வது என நமக்குத் தெரியவில்லை. பாராட்டு என்பது தான் இலக்கிய உலக பிரியாணியா என்ன?

Wednesday, November 23, 2011

ரஜினி - அரசியலுக்கு கனிகிறதா காலம்

அரசியலை உன்னிப்பாக கவனிப்பவர்கள் ஒரு போக்கை அவதானிக்கலாம். அரசியலின் மிகப்பெரிய வெற்றிகளெல்லாம் முயற்சியால் கிடைத்தவை அல்ல. காலம் கனியும் வரை காத்திருந்து அதை பயன்படுத்திக் கொண்டவர்களுக்கே மிகப்பெரும் வெற்றிகள் சொந்தமாகியுள்ளன.

இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும். சமீபத்தைய உதாரணம் .தி.மு. வின் வெற்றி. அந்தக் கட்சியே காணாமல் போய்விடும் என்று கூட ஒரு வருடத்துக்குமுன் சிலர் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிர்க் கட்சியாக இருந்தபோது அந்தக் கட்சி எதுவும் பெரிதாகச் செய்துவிட வில்லை. இருந்தாலும் தி.மு. மீதிருந்த அதிருப்தியும், ஸ்பெக்ட்ரம் கவாநித்தால் தந்த அதிர்ச்சியும் .தி.மு. வை ஆட்சியில் அமர்த்தியது. எந்தொரு பெரிய முயற்சியும் இல்லாமல் !!இதற்கு இன்னொரு காரணம் தமிழகத்தில் இரு கட்சிகளுக்கு மாற்றாக எந்தவொரு மாற்று சக்தியும் இல்லையென்ற நிலையும் தான். ஏன் தமிழகத்தில் அப்படியொரு மாற்று சக்தி உருவாகவே இல்லை?

ஒரு புதிய சக்தி தோன்றவும் ஒரு காரணம் அல்லது தேவை கண்டிப்பாக இருக்கவேண்டும். தேவை இருக்கும்போது அப்படியோரு சக்தி தானே உருவாகிவிடும் வெற்றிடம் இருந்தால் அதை நிரப்ப காற்று வருவதுபோல.

அப்படியொரு தேவை ஒரு காலத்தில் இருந்தபோது, அந்த அரசியல் வெற்றிடம் ரஜினியை உள்ளிளுத்தது. ஆனால் பல காரணிகளால் அவர் அப்போது அதை எடுத்துக்கொள்ளவில்லை. அந்த வாய்ப்பை தானே முன்வந்து தி.மு.-வுக்கு அளித்தார். தி,மு. வும் அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. அத்தோடு அந்த வெற்றிடமும் அப்போதைக்கு இல்லாமலானது.


-----


ஆனால் இப்போதைய தமிழக அரசியல் ஒரு வினோதமான சமன்பாட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. எதிக் கட்சியான தி.மு.. மிகப்பெரிய தோல்விகளையும், வழக்குகளையும் சந்தித்து வருகிறது. தான் பங்குபெறும் மத்திய அரசில் இருந்துகொண்டே சி.பி. வழக்குகளை சந்திப்பது அதை மிகப்பெரிய தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. தலைமைப் போட்டிகளும் அந்தக் கட்சியின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கியுள்ளன. ஏதாவது ஒரு அதிசயம் நடந்தால் தான் உண்டு.

மாற்றுக் கட்சியென சிறு நம்பிக்கை கொடுத்த விஜயகாந்த், கூட்டணிக்குப் பிறகு எம்.எல். -க்களை பெற்றாலும், தனது தனித் தன்மையை இழந்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் அதன் பலன் தெரிந்தது. மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது அவரது கட்சி.

பா. . , .தி.மு.. போன்ற கட்சிகள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை.


----------------------------------
இது இப்போதைய சூழ்நிலை. மிகப் பெரிய வெற்றியில் இருக்கும் .தி.மு. அரசை தட்டிக் கேட்க இப்போது யாருமே இல்லை என்ற நிலை தான் உள்ளது.

ஒரு மிகப் பெரிய விலையேற்றத்தைக் கூட மிகச் சாதாரணமாக இந்த அரசால் கொண்டுவர முடிகிறது. இதனால் மக்கள் கொதிப்படைந்தாலும் இந்த கோபம் வேறு எந்தக் கட்சிகளுக்கும் சாதகமாக மாறவில்லை.

தமிழக அரசியலில் ஒரு மிகப் பெரிய வெற்றிடம் மறுபடி உருவாகிவருகிறது.


---------------------
கடந்த பத்து வருடங்களில் ரஜினி அரசியலை இன்னும் கவனமாக கவனித்து வருகிறார்.

அவர்
எப்போதும் அதிலிருந்து விலகியதாகத் தெரியவில்லை. கடைசியாக ராகவேந்திர மண்டபத்தில் நடந்த கூட்டம் கூட பூடகமாகத் தான் இருந்தது. அத்வானி போன்ற தேசியத் தலைவர்களிடமும், மற்றும் பல மாநில அரசியல் தலைவர்களுடனும் ரஜினி கொண்டுள்ள நெருக்கம் குறிப்பிடத் தக்கது.இப்போது ரஜினிக்கு அரசியலில் செல்வாக்கு இல்லை என நம்பும் சிலர்கூட தேர்தலில் நாளில் ரஜினி வாக்களித்தது ஒரு மிகப் பெரிய செய்தியானதை மறந்திருக்க மாட்டார்கள். அவர் . தி.மு. -வுக்கு வாக்களித்தார் என்ற செய்தியும், ஊழலுக்கு எதிராக அவர் அளித்த ஒரு பேட்டியும் தமிழக தேர்தல் முடிவில் ஏற்படுத்திய ஒரு குறிப்பிடத் தக்க தாக்கத்தை மறுக்க முடியாது.

எனவே தமிழக அரசுக்கு மீது மக்கள் அதிருப்தியடைந்தால் அது இப்போதிருக்கும் எந்தொரு கட்சிக்கும் ஆதரவாக மாற்றிவிடாது. அது ஒரு வெற்றிடத்தை நோக்கியே செல்லும், அதுவே மறுபடி ரஜினியை உள்ளிழுக்கும் சக்தியாக இருக்கும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

ஒருமுறை அரசியலின் அழைப்பை தவிர்த்த ரஜினி, இம்முறை என்ன செய்யப் போகிறார் என்பது காலத்தின் கேள்வி