Friday, December 16, 2011

சாருவுக்கே அவதூறா? அடிப்பொடிகளின் அட்டாக்

சாருவின் நிகழ்சிகள் என்றால் பரபரப்பு மற்றும் அக்கப்போர் பிரியர்களுக்கு எப்போதுமே தீனிக்குப் பஞ்சமில்லை. அவரது லேட்டஸ்ட் புத்தக வெளியீடும் அதைச் சுற்றி நடக்கும் அக்கப்போர்களும் நம்மைப்போன்ற இலக்கிய வாசகர்களின் இலக்கிய தாகத்தை தணித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தப் புத்தகத்தை முழுவதும் வாசித்து ஒருவர் எழுதிய விமர்சனம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்த விமர்சனத்துக்கு பல விமர்சனங்கள் வந்து விட்டன.

http://www.tamilpaper.net/?p=5024

புத்தகத்தை விமர்சித்த அவரை சாருவின் ரசிகர்கள் பலவிதமாக விமர்சித்தனர். அதன் உச்சகட்டமாக சாருவின் தளத்தில் வந்துள்ள இந்த விமர்சனம்.

இதைப் படித்தபின் விமர்சித்த அவர் எழுதுவதையே விட்டுவிடுவார் எனத் தோன்றுகிறது. அப்படி ஒரு காட்டமான வசை இது. சாருவோடு மோதுபவர்களுக்கு இது நல்ல பாடம். நல்ல வேணும்,,, யாரு கிட்ட...

முதலில் உள்நோக்கம் என்றார்கள், அடுத்தது அரவது கவிதைகளைப் பற்றி திட்டினார்கள். அப்போதும் அவர் அசரவில்லை.

கடைசியாக அவரும் சாரு மாதிரி தான் எழுதுகிறார் என்று ஒரு கடுமையான வசை. ஆனால் நமக்கு என்ன சந்தேகம் என்றால் இதில் யாரை திட்டுகிறார்கள் என்றே புரியவில்லை.

சாரு போல எழுதுவது அவ்வளவு அசிங்கமா? :)----------------------------------------
charuonline.com/blog/?p=2722

"இப்போது, இந்த சி. சரவணகார்த்திகேயனுக்கு ஒரு வார்த்தை. உங்களைப்பார்த்தால் உண்மையில் பரிதாபமாகவே இருக்கிறது. ஏனெனில், சாருவைப் பற்றி எதையாவது தவறாக எழுதவேண்டும் என்ற நோக்கில், மூளை, நாடி, நரம்பெங்கும் சாரு வெறி பரவியதில், சாருவாகவே நீங்கள் மாறிவிட்டீர்கள் என்று தெரிகிறது. அதனால்தான் சாரு எழுதியதைப்போலவே உங்கள் விமர்சனம் என்ற துவேஷ வாந்தியும் இருக்கிறது."

-------------------------


இதுக்கு என்ன சார் அர்த்தம்? சாரு மாதிரி எழுதுவது தான் ரெம்பக் அசிங்கமான விஷயாமா? இதை சாரு தளத்திலேயே சொல்வதற்கு சாருவுக்கு எவ்வளவு நேர்மை இருக்கிறது...
ஆனால் சாருவின் ரசிகர்களுக்கு நமது வேண்டுகோள் ஒன்று. விமர்சிப்பவர்களை எப்படி வேண்டுமானாலும் நீங்களும் விமர்சியுங்கள். ஆனால் சாருவோடு ஒப்பிட்டு திட்டாதீர்கள். பாவம் அவர்கள். :)

Thursday, December 1, 2011

கொலைவெறி டி - தமிழன் இளிச்சவாயனா

தனது அறிவுலக சொத்துகளை பிறருக்குக் கொடுத்துவிட்டு அவர்களையே வாய்பிளந்து பாத்துப் புகழ்வதுதான் தமிழனின் தலைவிதி. தமிழனுக்கு இது பழகியது தான். இதை ஒரு வழக்கமாகவே பழகிக்கொண்ட தமிழனுக்கு இது ஒரு பெரிய விசயம் இல்லை தான்.

ஆதிக்க சக்திகளின் சதியையும், அவர்களின் கைக்கூலிகளின் கூப்பாடுகளையும் தமிழனின் தலை விதியையும் நினைக்கும் எவருக்கும் ரத்தம் கொதிப்பதை மறுக்க முடியாது. ஆனால் இன்றைய சூழலில் தமிழர்கள் ரத்தம் கொதிப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாத கையாலாகாத நிலைமையில் இருப்பதுயும் மறக்கக் கூடாது. (மறுக்க.. மறைக்க)

"கொலைவெறி டி" என்ற பாடலை தனது வீடுகளிலேயே கேட்டுக் கொண்டு புல்லரிக்கும் தமிழர்களைப் பார்த்தால் நமக்கு சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை. இந்தப் பாடல் எங்கும் பரவும்போது மகிழ்ச்சியடையும் தமிழன், தான் இன்னும் இளிச்சவாயன் தான் என ஒப்புக் கொள்கிறான்.

முறத்தால் புலியை விரட்டிய பெண்களைப் பற்றிப் பாடிய வரலாறு கொண்ட தமிழினத்தின் தன்மானத்தை தரம் தாழ்த்த, குலம் கெடுக்கும் கோடாரிக்காம்பு போல, தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலாரார் வெளியிடப் பட்டுள்ளது இந்தப் பாடல்.

"ஏன் இந்த கொலைவெறி" என்று உண்மையில் சொன்ன வடிவேலுவின் பெயரும் திட்டமிட்டு மறைக்கப் படுவது எந்தவிதமான நுண்ணரசியல் என்று நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

தமிழனையும், தமிழ் பண்பாட்டையும், குறிப்பாக தமிழ் பெண்களையும் அந்நிய மொழிகொண்டு வசைபாடும் இதுபோன்ற பண்பாட்டு அவலங்களை இன்னும் அனுமதித்தால், தமிழன் என்ற ஒரு இனம் இருந்ததை வரலாற்றில் கூட தேட முடியாதோ என்ற துக்கம் தம்மை தாக்குவதால் இதோடு முடித்துக் கொள்கிறோம்.

கண்ணிருப்போர் பார்க்கட்டும், காத்திருப்போர் கேட்கட்டும், கொஞ்சமாவது தன்மானமுயோர் கொஞ்சம் யோசிக்கட்டும்!!