Sunday, September 27, 2015

கமல் ரசிகர்களின் கலக்கம் ஏன்?

"இதைக் கண்டிப்பாக கமல் ரசிகர்கள் செய்திருக்க வாய்ப்பில்லை.யார் சொன்னாலும் நான் நம்பமாட்டேன்" என்றார் நண்பர்.

"ஏன் அப்படிச் சொல்றீங்க"

"கமல் ரசிகர்கள்னு யாராவது இருக்காங்களா என்ன? அப்படி யாராவது இருந்தால் தானே தாக்குவற்கு"

இது கொஞ்சம் ஓவர். நாம் இப்படி பேச முடியாது.

இருந்தாலும் சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட பின் கமல் ரசிகர்களின் கொண்டாட்டங்களைப் பார்க்க்கும்போது அவர்கள் ஒரு பதட்டத்தில் இருப்பது நன்றாகத்தெரிகிறது. தாக்குதல் நடந்தநாளில் கமல் அங்கு இருந்தும்கூட எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏன் இந்தப் பதட்டம்.

1. சொந்தசரக்கு: கமல் தனது வாழ்க்கையைப் பிரதிபலித்து எடுத்தபடம் உத்தமவில்லன். ரிசீசாகவே திணறிய அந்தப்படம் படுதோல்வியடைந்தது. அதற்கு தயாரிப்பாளரே காரணம் என கைகாட்டினார் கமல். மோகன்லாலுக்காக உருவாக்கப்பட்ட திரிஷ்யன் மலையாள ரீமேக் பாபனாசம் ஓரளவு காப்பாற்றியது. அதில் கமல் நடிப்பு திறமை என ரசிகர்கள் தங்களைத்தேற்றிக்கொண்டாலும்,  நடிக்கவே தெரியாத அஜய் தேவ்கன் நடித்த இந்தி வெர்சனும் சூப்பர்ஹிட். எனவே இதில் கமல் பெருமைகொள்ள ஏதுமில்லை என்பது தெளிவு.

அதைத்தொடர்ந்து அடுத்தபடமான தூங்காவனமும் ரீமேக்தான். ஆனால் சிவகார்த்திகேயன் நடித்த 8 படங்களும் அவருக்கு உருவாக்கப்பட்ட கதைகள்.

2. வெற்றிவிகிதம்

பெரிய நடிகர்கள் யாருமே ஒரு சமயத்தில் ஒரு படத்துக்குமேல் நடிப்பதில்லை. புதிய நடிகரான சிவகார்த்திகேயன் கூட இன்னும் அடுத்த படத்துக்கு கமிட் ஆகவில்லை. ஆனால் படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் அடுத்தடுத்து நடித்து வருகிறார் கமல். விஸ்வரூபம் 2 என்ன ஆனது என்றே தெரியவில்லை. படங்களில் வரவேற்பு குறைவதால் துணிக்கடை விளம்பரங்களில் நடித்து வருகிறார் என்று தகவல்கள் வருகின்றன.

3. மூட நம்பிக்கை ரசிகர்கள்

தனக்கு பிடித்தவர்களை எப்படியெல்லாம் விளிக்கலாம் என்று சில முறை இருக்கின்றன. ஆனால் "ஆண்டவரே" என்று சொல்வதெல்லாம் கொஞ்சம் ஓவர். கடவுள் இல்லை என்று சொல்லிக்கொள்ளும் கமல் இந்த மூடத்தனத்தை எப்படி அனுமதிக்கிறார் என்பது ஆச்சர்யம் தான். கமல் பக்தர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்களுக்கு கமல் பேசும் பகுத்தறிவு ஏதாவது புரிகிறதா என்பது வியப்புதான்.

தொடர் தோல்விகளால் பதட்டம் இயல்புதான், ஆனால் பொறாமையத் தவிர்த்து தங்கள் கவனத்தை ஆக்கப்பூர்வமாக படைப்புகளில் செலுத்துவது மட்டுமே மூத்த படைப்பாளிக்கும் அவரது ரசிகர்களுக்கும் பெருமைசேர்க்கும் என்பது மக்கள் கருத்து.


Wednesday, September 23, 2015

மதுரை தாக்குதலுக்குப்பின் கமல் கருத்து - மக்கள் அதிர்ச்சி

வளர்ந்துவரும் நடிகர் சிவகார்த்திகேயன், மதுரையில் சில ரவுடிகளால் தாக்கப்பட்டது தெரியவந்ததும் அனைவரும் அதிர்ந்தனர். சினிமா ஆர்வமிலாத நடுநிலையார்களும்கூட இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


இந்த தாக்குதலை நடத்தியது அவரின் தொடர் வெற்றிகள் மீது பொறாமை கொண்ட கமல் ரசிகர்கள் தான் என்று ஆரம்பத்தில் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன, சிவகார்த்திகேயன் வருவதற்கு சிறிது நேரம் முன்புதான் கமல் அங்கு வந்திறங்கிறார் என்பதும் குறிப்பிடப்பட்டது. ஆனால் இதில் கமலுக்கு ஒப்புதல் இருக்காது என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது.

ஆனால் புதிய தலைமுறை வெளியிட்டுள்ள இந்த வீடியோ நடுநிலையார்களை அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது. தாக்கப்பட்ட பின்னரும் யாரையும் குறைக்கூறாமல், அது ஒரு சிறிய சம்பவம் எனச் சொல்லி தனது பெருந்தன்மையை சிவகார்தியேயன் காட்டினார்.

ஆனால் அதற்கு மாறாக, உலகமே வீடியொவில் பார்த்த அந்த சம்பவம்(தாக்குதல்) நடக்கவே இல்லை என்பதுபோல “அதெல்லாம் ஒன்றுமில்லை” என்று கமல் வெகு கூலாக சிரித்துக்கொண்டே சொல்லும் காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.  இது சில சந்தேகங்களையும் எழுப்புவதாக சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.இதில் சம்பத்தப்பட்டவர்களை காப்பாற்ற முயல்கிறாரா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

வீடியோ லின்க்
https://www.youtube.com/watch?v=mrE0LyHmBr8சிவகார்த்திகேயன், தன்மீது தாக்குதல் நடந்த பின்னரும் ஒரே மேடையில் கமலுடனே சிரித்தவண்ணம் கலந்துகொண்டதும் மக்களால் பாராட்டப்படுகிறது.கமல் ஒரு மகத்தான கலைஞர் என்பதில் நமக்கு மாற்று கருத்தில்லை. இருந்தாலும் இந்த சம்பவம் மக்கள் மனதில் கவலையை உருவாக்கியுள்ளது.